Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆரோக்கியத்தை உயர்த்தும் பருப்பு வகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

ஆரோக்கியத்தை உயர்த்தும் பருப்பு வகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Sat, 25 Nov 2023 6:17:49 PM

ஆரோக்கியத்தை உயர்த்தும் பருப்பு வகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: ஆரோக்கியமாக இருக்க உதவும் பருப்பு வகைகள் பற்றி தெரிந்து கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வோம்.

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவாளர்களுக்கு என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவாளர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். மேலும் பருப்புக்களில் புரோட்டீன் மற்றுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதுமட்டுமல்லாமல், பருப்புக்களிலேயே பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பொதுவான ஒரு ஒன்று என்றால், அது குறைவான கலோரி இருப்பது தான். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இல்லாமல் இருக்கலாம்.

மேலும் இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்-2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். இப்போது பருப்புக்களின் கைகளையும், அதில் உள்ள சத்துக்களையும் பார்ப்போம்.

pulses,health,immunity,energy,health , பருப்பு வகைகள், ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு, சக்தி, உடல் நலன்

துவரம் பருப்பு: துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.

பாசிப்பருப்பு: பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

பச்சை பயறு: இந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமானமடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை: கொண்டைக்கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

Tags :
|
|
|