Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சீரகம் அளிக்கும் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

சீரகம் அளிக்கும் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Wed, 30 Sept 2020 11:59:33 AM

சீரகம் அளிக்கும் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாக உள்ளது. அதில் சீரகம் முக்கிய இடம் பெறுகின்றது.

சீரகம் என்றால் சீர் + அகம்… இது அகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பிரச்சனைகளை தீர்க்கிறது. இது இனிப்பு சுவை, குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத் தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

நற்சீரகம், காட்டு சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் அல்லது சோம்பு என சீரகம் பல வகைகளில் உண்டு. நற்சீரகமும், பெருஞ்சீரகமும் உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும். மற்றவை மருந்தாக மட்டுமே பயன்படும்.

cumin water,vitamin c,digestion,bowel cancer ,
சீரகத் தண்ணீர், வைட்டமின் சி, உணவு செரிமானம், குடல் புற்றுநோய்

இது உடலில் உள்ள பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவி புரிகின்றது. சீரகத்தையும். ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, வயிறு உப்பசம் தீரும்.

உணவு செரிமானம் ஆகாமல் எதிர்த்துக்கொண்டு வரும்போது சாதாரண தண்ணீருக்குப் பதில், உணவருந்தும்போது, இளஞ்சூடான சீரகத் தண்ணீர் அருந்தலாம். சீரகத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ, குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. சீரகத் தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டுவர, எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.

Tags :