Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நன்னாரி வேரில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளுங்கள்

நன்னாரி வேரில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Thu, 26 Nov 2020 4:19:38 PM

நன்னாரி வேரில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளுங்கள்

நன்னாரி வேரில் உள்ள மருத்துவக்குணங்கள் பற்றி தெரியுங்களா? தெரிந்து கொள்ளுவோம் வாங்க.

சித்த மருத்துவத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிற வேர் வகைகளில் ஒன்று தான் நன்னாரி வேர் ஆகும். இந்த வேர் நல்ல சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற நீரை வியர்வையாக வெளியேற்றி உடல் சூட்டை தணிக்கும்.

அதேப்போல் நீரில் நன்னாரி பட்டையை போட்டு ஊறவைத்து அதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் இருமல் மற்றும் கழிச்சல் சரியாகும்.

nannari root,jaundice,avocado,coriander powder ,நன்னாரி வேர், காமாலை நோய், வெண்ணெய், கொத்தமல்லி பொடி

வாழை இலையை எடுத்து அதில் நன்னாரி வேரை போட்டு கட்டி தீ வைத்து சாம்பலாக்கி அந்த சாம்பலை எடுத்து அதனுடன் சீரகம் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை நீரில் கலந்து குடித்து வர சிறுநீரக பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

நன்னாரி வேர் பொடி மற்றும் கொத்தமல்லி பொடி ஆகியவற்றை சேர்த்து நீரில் கலந்து குடித்து வந்தால் மன கோளாறுகள் நீங்கும். மேலும் வயிறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும். மேலும் கற்றாழையுடன் நன்னாரி வேர் பொடியை சேர்த்து சாப்பிட்டால் விஷ கடியால் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகும்.

மேலும் ஆரம்ப கால குஷ்ட பிரச்சனைக்கு அரை கிராம் வெண்ணெய்யுடன் நன்னாரி பொடி சேர்த்து கலந்து சாப்பிட்டால் போதும். அதேப்போல் தேனில் நன்னாரி வேர் பொடியை கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் சரியாகும்.

Tags :