Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் காய்கறிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் காய்கறிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Sun, 12 Nov 2023 4:02:24 PM

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் காய்கறிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: மற்ற உணவு பொருட்களை காட்டிலும் பொதுவாக காய்கறிகள் அனைத்துமே உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பல சத்துக்களை கொண்டுள்ளன.

காய்கறிகளில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் என உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல விஷயங்கள் நிரம்பியுள்ளன. உங்கள் உடலிலுள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் சில காய்கறிகளை பற்றி இங்கே காண்போம், காய்கறிகளில் அதிகளவு நார்சத்து, புரோட்டீன் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன.

நார்சத்து என்பது கொழுப்பின் அளவையும், சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, அப்படிப்பட்ட சத்துக்கள் குரூசிஃபெரஸ் காய்கறிகளான ப்ரோக்கோலி, பிரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் மற்றும் காலிஃபிளவர் போன்றவற்றில் உள்ளன. இவற்றில் இயற்கையாகவே சர்க்கரை குறைவாக உள்ளன, மேலும் இவற்றில் அதிகமாக நிரம்பியுள்ள நார்ச்சத்து ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது, மேலும் இது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

vegetables,nutrition,thiocyanates,rich,cauliflower ,காய்கறிகள், ஊட்டச்சத்து, தியோசைனேட்டுகள், நிறைந்துள்ளது, காலிபிளவர்

பல வகை கீரைகள் கொண்ட சாலட்டை சாப்பிடுவது உங்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. பல்வேறு வகையான கீரைகள் வெவ்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன, இவற்றில் நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் அதிகமாக உள்ளன. குறிப்பாக சிவப்பு-இலை கீரையில் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. இது நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும், இன்சுலின் ஒழுங்குமுறையை மேம்படுத்தவும் உதவுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. பசலை கீரையில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த இது சிறந்த உணவாகும். ஒரு கப் கீரையில் 7 கலோரிகள், 1 கிராம் கார்போஹைட்ரேட், 0.9 கிராம் புரதம் மற்றும் 0.7 கிராம் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ மற்றும் கே, வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் மாங்கனீஸ் ஆகியவை உள்ளது. கீரையில் நிறைந்துள்ள இத்தகைய சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.

அடுத்ததாக கத்தரிக்காய் அதிக ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி வகையாகும். ஒன்றரை கப் சமைத்த கத்திரிக்காயில் சுமார் 18 கலோரிகள், 4.3 கிராம் கார்போஹைட்ரேட், 0.4 கிராம் புரதம் மற்றும் 1.25 கிராம் நார்ச்சத்து உள்ளது.

இதனை நீரிழிவு நோயாளிகள் அதிகமாக சாப்பிடலாம். மேலும் காலிஃபிளவர் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, குறைந்த கார்போஹைட்ரேட்டுகள், பைட்டோநியூட்ரியண்ட்களான சல்ஃபோராபேன்கள், குளுக்கோசினோலேட்டுகள் மற்றும் தியோசைனேட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது.

Tags :
|