Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பல்வேறு பாதிப்புக்களுக்கு தீர்வுகளை வழங்கும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு

பல்வேறு பாதிப்புக்களுக்கு தீர்வுகளை வழங்கும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு

By: Nagaraj Tue, 20 Sept 2022 6:42:09 PM

பல்வேறு பாதிப்புக்களுக்கு தீர்வுகளை வழங்கும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு

சென்னை: எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளதால் இது பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை உள்ளது. சருமத்தில் ஏற்படும் பல்வேறு பாதிப்புக்களுக்கு தீர்வுகளை வழங்கும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு.

முட்டையின் வெள்ளைக் கருவை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் வரை வைக்கவும் . பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்தி வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பிரகாசமாக தோற்றமளிக்கும்.

skin,color,scars,lemon juice,egg white ,சருமம், நிறம், தழும்புகள், எலுமிச்சை சாறு, முட்டை வெள்ளை கரு

எலுமிச்சை சாற்றை எடுத்து, அதில் சிறிது நீர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் உபயோகித்து வந்தால் சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.

தயிருடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு பாவித்து வருவதன் மூலம் , சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.

Tags :
|
|
|