Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்ட எலுமிச்சை பழச்சாறு

இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்ட எலுமிச்சை பழச்சாறு

By: Nagaraj Thu, 22 Dec 2022 9:31:35 PM

இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்ட எலுமிச்சை பழச்சாறு

சென்னை: உயர் இரத்த அழுத்தம் ,தலை சுற்றல் போன்றவை உடையவர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு உதவுகிறது. மேலம் எலுமிச்சைப் பழச்சாறை அடிக்கடி குடித்து வந்தால் உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் வெளியாகி இரத்தம் சுத்தமாகும் .

எலுமிச்சை சாறோடு தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் சார்ந்த பிச்சனைகள் நீங்கி கல்லீரல் வலிமை பெறும். எலுமிச்சை சாறோடு சீரகம் மற்றும் மிளகு சேர்த்து குடித்து வந்தால் பித்தம் குறையும்.

தினமும் உடலில் எலுமிச்சை சாறு தேய்த்து குளித்து வந்தால் தோல் வறட்சி நீங்கும்.எலுமிச்சையில் வைட்டமின் சி அடங்கியுள்ளதால், சருமத்தை பளப்பளப்பாக வைத்திருக்க உதவும்.

fatty,beneficial,lemon juice,refreshing,warming ,கொழுப்பு, நன்மை, எலுமிச்சை சாறு, புத்துணர்ச்சி, உடல் சூடு

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மூக்கில் ரத்தம் வடிதல், மூலநோயில் உண்டாகும் ரத்தக் கசிவு போன்ற நிலைகளில், ரத்தப் போக்கை தடுத்து நிறுத்த இது உதவுகிறது . உயர் இரத்த அழுத்தம் ,தலை சுற்றல் போன்றவை உடையவர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு மிகவும் நல்லது.

வெயில் காலத்தில் உடல் சூடு நீங்கி, புத்துணர்ச்சி பெற குளிக்கும் நீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, குளிக்கலாம் .உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை கரைக்க இது உதவுகிறது .

Tags :
|