Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பெரிய பயன்தரும் இயற்கை மருத்துவ முறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்

பெரிய பயன்தரும் இயற்கை மருத்துவ முறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Sun, 25 Dec 2022 10:58:37 PM

பெரிய பயன்தரும் இயற்கை மருத்துவ முறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்

சென்னை: வேப்பிலையுடன் ஓமவல்லி இலையை அரைத்து நெற்றியில் தடவிவர சளி சரியாகும். தூதுவளை, ஆடாதோடா, கண்டங்கத்திரி இலையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கஷாயம் செய்து தேனுடன் கலந்து சாப்பிட, நாள்பட்ட கட்டிய சளியும் கரையும்.

கருந்துளசியை பிழிந்து, சாரு எடுத்து, தினமும் காலை மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட சளி – கபம், மார்பு சளி குணமாகும். ஆடாதோடா இலையை போடி செய்து தேன்கலந்து தினமும் சாப்பிட்டு வர, இருமல் சளி நிற்கும் கடுக்காய் பொடியுடன் நெல்லி பொடியையும் கலந்து தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம் நீங்கும்.

pomegranate juice,rose flower,nose balm,arugula juice,camphor ,
மாதுளம் பழச்சாறு, ரோஜாப்பூ, மூக்கடைப்பு, அருகம்புல் சாறு, கற்பூரம்

குழந்தைகள் சளியினால் மூச்சு விட சிரமபட்டால், சிறிது தேங்காய் எண்ணெய் மூக்கில் தடவிட, சிரமம் குறையும். அமுக்கிராங்கிழங்கு பொடி செய்து, தினமும் இரவில் பாலுடன் சாப்பிட்டு வந்தால்,கபம் போகும். தூதுவளை ரசம் அல்லது தூதுவளை சூப் குடித்தால் சளி போய்விடும். தேங்காய் எண்ணையை கற்பூரம் சேர்த்து சுடவைத்து நெஞ்சில் தடவினால், நெஞ்சு சளி குணமாகும்.

ரோஜா பூவை முகர்ந்து பார்த்தல் மூக்கடைப்பு நீங்கும், அருகம்புல் சாறு சளிக்கு மிகவும் நல்லது. மாதுளம் பழம் சளிக்கு மிகவும் நல்லது. மாதுளம் பழச்சாறை எலுமிச்சம் சாருடன் கலந்து சாப்பிட்டால் சளி சரியாகும்.

Tags :