Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்

இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Sat, 11 Feb 2023 08:45:05 AM

இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: இவற்றை இரவில் தவிர்க்கணும்... இரவில் சாக்லேட் உட்கொள்வது பதற்றத்தை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடும்.

இரவு உணவில் இனிப்பு சேர்ப்பது உடலில் இன்சுலின் எதிர்ப்பை உருவாக்குகிறது. இது எடை அதிகரிப்பு மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பாலில் அதிக அளவு புரோட்டின், கால்சியம் உள்ளது. இவை உடலுக்கு முக்கியமானவைதான்.

ஆனால், பாலில் உள்ள லாக்டோஸ் செரிக்கத் தாமதமாகும். இரவில் பால் அருந்துவதால், செரிமானப் பிரச்னைகள் ஏற்படும். சீரான தூக்கம் பாதிக்கப்படும்.

நூடூல்ஸ், மேகி போன்ற துரித உணவுகளை கண்டிப்பாக இரவில் எடுத்துக் கொள்ள வேண்டாம். இவை வயிறை உப்பச் செய்து விடும். அசைவ உணவுகள், பொரித்த உணவுகள், மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட், கூல் டிரிங்ஸ் இவற்றை இரவில் தவிர்க்கவேண்டும். மசாலா உணவுகள் அசிடிட்டியை ஏற்படுத்தும். அசைவம், பரோட்டா உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

digestion,disorder,high pressure,opportunity,dinners ,செரிமானம், கோளாறு, உயர் அழுத்தம், வாய்ப்பு, இரவு உணவுகள்

தர்பூசணி, வெள்ளரி போன்ற அதிக நீர் நிறைந்த உணவுகளை இரவில் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். தூங்க செல்வதற்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுவதன் காரணமாக, சிறுநீர்பை நிறைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுகிறது. இதன் காரணமாக தூக்க பிரச்சனை ஏற்படுகிறது.

இரவு நேரங்களில் காபி, டீயை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், காபியில் உள்ள ‘கேஃபைன்’ எனற வேதிப் பொருளும், டீயில் இருக்கும் த்யோப்ரமைன் எனற வேதிப் பொருளும் மூளைக்கு சுறுசுறுப்பை அளிக்கும். தூக்கத்தை விரட்டும்.

இரவு 7 மணிக்கு மேல் உப்பான உணவுகளை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். ஏனெனில் உப்பு உடம்பில் நீர் தேக்கத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இரவில் சோடியம் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும்.

கீரையை இரவு உணவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், இரவில் கீரையை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு, தேவைக்கும் அதிகமான கலோரி கிடைக்கிறது. அதிக கலோரி வயிற்றை அசெளகர்யம் அடையச் செய்கிறது. இதனால், செரிமானக் கோளாறு ஏற்படும்.

Tags :