Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தேங்காய் மற்றும் தேங்காய் பாலில் உள்ள நன்மைகள் பற்றி அறிவோம்

தேங்காய் மற்றும் தேங்காய் பாலில் உள்ள நன்மைகள் பற்றி அறிவோம்

By: Nagaraj Sun, 29 Jan 2023 11:49:20 PM

தேங்காய் மற்றும் தேங்காய் பாலில் உள்ள நன்மைகள் பற்றி அறிவோம்

சென்னை: தேங்காயை உடைத்த அரைமணி நேரத்தில் பச்சையாக சாப்பிடும்போது, அதில் ஏராளமான சத்துகள் நமது உடல் ஆரோக்கியத்தை காக்கிறது.தேங்காய் மற்றும் தேங்காய்ப்பாலில் உள்ள நன்மைகள் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தேங்காயின் நன்மைகள்: உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றி ரத்தத்தை சுத்தமாக்கும், தேங்காய்ப் பாலில் சிறிதளவு கசகசா, பால் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் சரியாகும்.உச்சி முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

தேங்காயை துருவி சிறிது, நாட்டுச் சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு மாலை வேளைகளில் கொடுத்துவந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

protein,starch,calcium,phosphorus,health,coconut ,புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், ஆரோக்கியம், தேங்காய்

தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தியானது தேங்காயை தவிர வேறு எந்த பொருளிலும் இல்லை என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தேங்காய்ப்பால் பருகிவரும் போது அவை உடல்எடையைக் கட்டுப்படுத்தும்.

தேங்காய் நீரைப் பருகிவந்தால் சமனற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல் குணமாகும். பழங்காலத்தில், இறக்கும் தறுவாயில் இருக்கும் ஒருவருக்கு தேங்காய்ப் பால் கொடுத்து அவர்களின் வாழ்நாட்களை நீட்டித்தனர். இவ்வளவு சிறப்புகளை உடைய தேங்காய் மற்றும் தேங்காய்ப் பாலை உணவில் சேர்த்துச் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. எனவே, தவறாமல் இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

Tags :
|
|