Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நெல்லிக்காய் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

நெல்லிக்காய் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Sun, 20 Nov 2022 9:52:31 PM

நெல்லிக்காய் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: நெல்லிக்காயின் பயன்கள் தெரியும். அதில் டீ போட்டு குடித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுங்களா. தெரிந்து கொள்வோம் வாங்க.

நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.

வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. நெல்லிக்காய், வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம்.

turmeric powder,lemon juice,honey,gooseberry,pepper ,மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு, தேன், நெல்லிக்காய், மிளகு

நெல்லிக்காய் டீ செய்ய தேவையான பொருள்கள்:

நெல்லிக்காய் – 2 விதை நீக்கியது
மிளகு பொடி – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

செய்முறை: நெல்லிக்காயை விதை நீக்கி, நன்கு தட்டிக் கொள்ள வேண்டும். பின் மிளகைப் பொடிக்கவும். அடுத்து இரண்டு டம்ளர் நீரில் இவற்றுடன் மஞ்சளைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

ஒரு டம்ளராக வற்றியதும், எலுமிச்சைச்சாறு சேர்த்து, விருப்பப்பட்டால் தேன் சேர்த்துப் பருகவும்.

Tags :
|