Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • முருங்கைக்கீரை பொடியின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்

முருங்கைக்கீரை பொடியின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Sat, 11 Feb 2023 08:45:33 AM

முருங்கைக்கீரை பொடியின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்

சென்னை: முருங்கைக்கீரை பொடியின் நன்மைகள்... முருங்கைகீரையை தினமும் சமையல் செய்து சாப்பிட முடியாது. பொடியாக வைத்துக்கொண்டால் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அரை ஸ்பூன் பொடி இரண்டு பிடி கீரைக்கு சமம்.

இரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் எடையை கட்டுப்படுத்த உதவும். முடி உதிர்தலை கட்டுப்படுத்தி வளரச்செய்யும். கால்சியம், விட்டமின்ஸ், மினரல் சக்தி நிறைந்தது. பார்வை குறைபாடு, மூட்டுவலி, தோல் சுருக்கம் இவற்றிற்க்கு நிவாரணம்.

shakti,fries,gravy,drumsticks,kids ,சக்தி, பொரியல், குழம்பு, முருங்கைக்கீரை, குழந்தைகள்

முருங்கைகீரையை சுத்தப்படுத்தி நிழலில் நன்றாக காய வைக்கவும். கையில் பிடித்தால் நொருங்கும் அளவிற்கு காய்ந்ததும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம்.

தினமும் பொரியல், குழம்பில் என சிறிது சேர்த்துக் கொள்ளலாம். தோசைமாவில் கலந்து தோசை வார்க்கலாம். பொடிதோசையைப் போல் தூவியும் விடலாம். வளரும் குழந்தைகளுக்கு தேவையான சக்தி எளிதாக கிடைத்துவிடும்.

Tags :
|
|
|