Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அத்திக்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

அத்திக்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Fri, 24 Mar 2023 10:54:33 PM

அத்திக்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: அத்திக்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள். அத்திப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து இருப்போம். ஆனால் அத்திக்காய்களை சாப்பிட்டாலும் பலவிதமான நன்மைகள் உண்டு என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. அத்திக்காய் பற்றிய விழிப்புணர்வு இன்னும் மக்களிடையே போய்ச் சேர வேண்டும்.

அத்திக்காய் தேவையான அளவு வாங்கி வந்து அவற்றை நான்கு துண்டுகளாக நறுக்கி அதில் உள்ள விதைப் பகுதியை சுரண்டி எடுத்து விட வேண்டும். அத்திக்காயின் நடுவில் பூச்சி மற்றும் பூழு இருக்கலாம் அதை நன்கு கவனித்து சுத்தப்படுத்த வேண்டும். நறுக்கிய பின் தண்ணீரில் போட்டு நன்கு கழுவ வேண்டும்.

அத்திக்காய் துவர்ப்பு சுவையுடையது. அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து குழம்பு வைக்கலாம்.

athikai,good fruit,stomach ulcer,best medicine,ranas ,அத்திகாய், நல்ல பலன், வயிற்று புண், சிறந்த மருந்து, ரணங்கள்

அத்திக்காயில் பொரியல் செய்யலாம். இதில் வைட்டமின் ஓ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை அதிக அளவில் நிறைந்திருக்கின்றன.

அத்திக்காயைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வெள்ளைப்படுதலை நிறுத்தும். சீதபேதியை குணமாக்கும். வாயுவைப் போக்கும். ரத்த மூலத்தை குணப்படுத்தும் வல்லமை உடையது. உடலிலுள்ள ரணங்களை ஆற்றக் கூடியது. வெட்டை நோயை குணப்படுத்தும். அத்திக்காய் வயிற்று புண்ணுக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

வயிற்றில் புண் இருக்கும் காலங்களில் இதை உணவுகளில் சேர்த்துக் கொண்டாலே போதும் நல்ல பலனை உணரலாம். அத்திப்பழம், அத்திக்காய் மட்டுமல்லாமல் அத்திமரமும் நமது ஆரோக்கியத்துக்குப் பெரும் பங்கு அளிக்கிறது. அமர்ந்து தியானம் செய்வதற்கு இந்த அத்தி மரத்திலிருந்து பலகைகளை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்

Tags :