Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கொய்யா இலை அளிக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

கொய்யா இலை அளிக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Sat, 07 Oct 2023 4:04:25 PM

கொய்யா இலை அளிக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: செரிமான கோளாறுகள் நீங்கும்... கொய்யா இலையின் சாற்றைப் பிழிந்து அதனுடன் சர்க்கரை அல்லது கற்கண்டு, தேன் கலந்து சாப்பிட, செரிமான கோளாறுகள் அனைத்தும் தீரும்.

கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் பல்வலி, ஈறு பிரச்னை, வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றை அது குணப்படுத்தும். கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ செய்து, 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பட்டு நீரிழிவு நோய் குணமாகும்.

digestive disorders,gout,guava leaf,thyroid,heart problem ,செரிமானக் கோளாறுகள், நீங்கும், கொய்யா இலை, தைராய்டு, இதய பிரச்சினை

கொய்யா இலைகள் டெங்கு காய்ச்சலுக்கு இயற்கையான மருந்தாகக் கருதப்படுகிறது. ஏனெனில், கொய்யா இலைச் சாறு இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். கொய்யா இலை டீ, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு சிறிது தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், விரைவில் உடலில் உள்ள ஊளைச் சதை குறைவதோடு, உடல் எடை குறைவதையும் உணரலாம். கொய்யா இலைகள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை கொடுக்கும் வல்லமை கொண்டது. இதய கோளாறுகள், காய்ச்சல், தொடர் இருமல், சளி தொல்லை போன்ற அனைத்துக்கும் இது நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

கொய்யா இலை கஷாயம் இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது. மேலும், தைராய்டு சுரப்பையும் சமநிலைப்படுத்துகிறது.

Tags :
|