Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வேர்க்கடலையில் அடங்கியுள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

வேர்க்கடலையில் அடங்கியுள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Tue, 11 Oct 2022 11:28:50 AM

வேர்க்கடலையில் அடங்கியுள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: வேர்க்கடலையின் நன்மைகளைப் பற்றி தெரியும். இதன் எடை குறைக்கும் தன்மையால், வேர்க்கடலை பல உணவு பொருட்களுக்கு மத்தியில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

உயர் கார்போ உணவுகளுக்கு மாற்றாக வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலையால் தயாரிக்கப்பட்ட பொருட்களை உணவியல் வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர். உயர்ந்த கார்போ சத்து கொண்ட பருப்பு வகைகளுக்கு மாற்றாக வேர்கடலையை பச்சையாக எடுத்துக் கொள்ளலாம். தினமும் சாதாரண வெண்ணெய்க்கு மாற்றாக வேர்க்கடலை வெண்ணெய்யை பயன்படுத்தலாம்.

body weight,digestion,fast,peanuts,helps ,உடல் எடை, ஜீரணம், விரைவு, வேர்க்கடலை, உதவுகிறது

வேர்க்கடலை அந்த அளவிற்கு ஒரு ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கிய உணவாக கருதப்படுகிறது. மேலும் இதன் எடை குறைப்பு தன்மை, பல பொருட்களுக்கு மாற்றாக இதனை பயன்படுத்த வைக்கிறது. நீங்கள் கடினமான உணவு கட்டுப்பாட்டை நிர்வகிப்பவரா? உங்களுக்கு உங்கள் எடை குறைப்பில் வேர்க்கடலை பற்றிய சந்தேகம் இருக்குமானால் இந்த பதிவைப் படித்து எடை குறைப்பில் வேர்க்கடலை எப்படி உதவுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.


அதிக நார்ச்சத்து மற்றும் புரதம்: எடை குறைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு அதிகம் தேவைப்படும். புரதம் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்,


வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். நார்ச்சத்து உணவை விரைந்து ஜீரணித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு, மற்றும் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறது. இதனால் உங்கள் உணவுத் தேடல் குறைந்து, குறைவான உணவு உட்கொள்ளல் சாத்தியமாகிறது. இதனால் எடை குறைப்பும் சாத்தியமாகிறது.

Tags :
|