Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சித்தரத்தையால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

சித்தரத்தையால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Sun, 14 May 2023 12:53:35 PM

சித்தரத்தையால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: சித்தரத்தை பயன்கள்... இஞ்சி குடும்பத்தைச் சார்ந்ததுதான் சித்தரத்தை ஆகும். இது கிழக்காசிய நாடுகளில் “சீன இஞ்சி” என்று அழைக்கப்படுகின்றது. சித்தரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. சித்தரத்தை, பேரரத்தை என்பதாகும். இந்தியாவில் இவை பயிரிடப்படுகின்றன. இதன் வேர் பல மருத்துவ குணங்கள் கொண்டது.

ஆஸ்துமா, இளைப்பு, இருமல், சளி போன்றவற்றை குணப்படுத்தும். மூச்சடைப்பு ஏற்படும் நபர்களுக்கு சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு இவை அனைத்தையும் லேசாக வறுத்து அரைத்துப் பொடியாக்கி அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

எலும்புகளை பலப்படுத்தும். சித்தரத்தை அமுக்கிரா கிழங்கை இடித்து பொடியாக்கி 48 நாட்கள் இரண்டு வேளை சாப்பிட்டு வர எலும்பு பலம் பெறும். புற்றுநோயைக் குணப்படுத்தும். இது நிறைய வகையான புற்று நோய்களை குணப்படுத்தக்கூடியது. குறிப்பாக குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய் போன்றவற்றை தடுக்கும்.

health,image,benefits,digestive acid,increase ,ஆரோக்கியம், சித்தரத்தை, பயன்கள், ஜீரண அமிலம், அதிகரிக்கும்

இதிலுள்ள ப்ளோனாய்டுகள், என்சைம் செயற்பாட்டை சரிசெய்து புற்று நோயை விரட்டுகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடம்பில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றுகின்றது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது. திசுக்களுக்கு ஊட்டம் அளிக்கின்றது.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். ஜீரண அமிலத்தை சரியாகச் சுரக்கச் செய்து உமிழ் நீரைச் சுரக்கச் செய்து உணவை ஜீரணமாக்க உதவுகின்றது. அனாஸியா மற்றும் அடி வயிற்று வலியை சரிசெய்கின்றது. இதயம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் குணமாகி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.

Tags :
|
|