Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சாமையில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

சாமையில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Sat, 27 Aug 2022 11:37:48 AM

சாமையில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சாமையின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

samai,uses,constipation,solution,pongal,itli ,சாமை, பயன்கள், மலச்சிக்கல், தீர்வு, பொங்கல், இட்லி

சாமையில் இரும்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகம். இது இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று. பொதுவாக முதியவர்களுக்கும், நோய்வாய்பட்டவர்களுக்கும் மலச்சிக்கல் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது.

உடம்பிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேரவில்லை என்றாலே அது மற்ற நோய்களுக்கு மூல காரணியாக அமைந்து விடும். நோய்களுக்கெல்லாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலை தீர்க்கிறது சாமை. சாமையை கொண்டு பொங்கல், இட்லி, உப்புமா, சாம்பார் சாதம் என பலவிதமான உணவுகளை செய்து சாப்பிடலாம்.

Tags :
|
|
|