Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கருணைக்கிழங்கில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

கருணைக்கிழங்கில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Thu, 27 July 2023 11:13:11 PM

கருணைக்கிழங்கில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: கருணைக்கிழங்கு சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணமடைகின்றன. பசியைத் தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும்.

உடல் எடையை குறைக்க விரும்புவர்களும், கருணைக் கிழங்கை சாப்பிடலாம். கருணைக்கிழங்கு பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொடை, இடுப்பு மற்றும் உடல் வலியைப் போக்கும் ஆற்றல் கொண்டது. எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர எலும்புகள் வலிமைப் பெறும்.

blockage,blood vessel,caraway,health,heart attack, ,அடைப்பு, ஆரோக்கியம், கருணைக்கிழங்கு, மாரடைப்பு, ரத்தக்குழாய்

கருணைக்கிழங்கு பித்தத்தின் அளவை சமசீராக வைக்கும் தன்மை கொண்டது. எனவே பித்தம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டவர்கள் கருணை கிழங்கை அடிக்கடி சாப்பிட பித்தம் கட்டுப்படும். பித்த கற்கள் உருவாவதை தடுக்கும்.

கருணைக்கிழங்கு வாரம் மூன்று அல்லது நான்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

Tags :
|