Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ரோஜாப்பூக்களில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

ரோஜாப்பூக்களில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Sun, 03 Sept 2023 4:58:50 PM

ரோஜாப்பூக்களில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: ரோஜாப்பூக்கள் தலையில் வைப்பதற்கும் , அலங்கரிப்பதற்க்கும் மட்டுமல்லாமல் ரோஜாப்பூக்களில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.

உலகில் மொத்தம் 30,000 வகை ரோஜாக்கள் உள்ளது. ரோஜாப்பூ நிறைய நாடுகளில் தேசிய மலராகவும் விளங்குகிறது பன்னீர் ரோஜா வகைகள் மற்றும் பெங்களூர் ரோஜா வகைகள் என மொத்தம் இரண்டு வகை ரோஜாக்கள் மட்டும் தான் இந்தியாவில் உள்ளது.

இந்த இரண்டு ரோஜா வகைகளும் மருத்துவ குணங்கள் நிறைந்தன. ரோஜாப்பூவின் இதழ்களை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் உள்ள வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. மேலும் , ரோஜாப்பூவை சாப்பிடுவதால் நாம் உடலில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகள் வெளியேறுகின்றன.

roses,immunity,skin,glow,health benefits ,ரோஜாப்பூக்கள், நோய் எதிர்ப்பு சக்தி, சருமம், பளபளப்பு, ஆரோக்கிய நன்மை

ரோஜாப்பூவின் இதழ்களை வெறுமனே சாப்பிடலாம். ரோஜாப்பூவின் இதழ்களை காயவைத்து அதில் தேன் கலந்து சாப்பிடலாம். இதை குல்கந்த் எனக்கூறுவர்கள்.

ரோஜாவின் இதழ்களை வெயிலில் காயவைத்து அரைத்து அதில் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து bodu scrub போன்று உடலில் தேய்த்துக்கொள்ளலாம். மேலும் இதில் பால் மற்றும் தண்ணீர் கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாரம் 2 முறை இதை பயன்படுத்தினால் தோல் பளபளப்படையும் மற்றும் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

Tags :
|
|
|