Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பொன்னாங்கண்ணியில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க!!!

பொன்னாங்கண்ணியில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க!!!

By: Nagaraj Sat, 15 Apr 2023 6:21:43 PM

பொன்னாங்கண்ணியில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க!!!

சென்னை: பொன்னாங்கண்ணியில் உள்ள சத்துக்கள்... கீரைகளில் உள்ள சத்துக்களை விட சிறந்தது எதுவுமில்லை. அந்த வகையில் பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு சக்தி தரும் அற்புதமான கீரை.

பொன்னாங்கண்ணிக் கீரையில் சுண்ணாம்புச் சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் சி ஆகியவை அடங்கியுள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என இரண்டு வகைகள் உள்ளது. இதில் சீமை பொன்னாங்கண்ணியில் மருத்துவ குணம் குறைவு. நாட்டுப் பொன்னாங்கண்ணியில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது.

மூல நோயால் அவதிப்படுபவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் பூண்டு சேர்த்து வதக்கி சீரகம் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கலாம். இதனை சாப்பிடும் போது புளி, காரத்தை தவிர்க்க வேண்டும். உப்பின் அளவையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

eye irritation,eyesight,juice,ponnankani , கண்எரிச்சல், கண்பார்வை, சாறு, பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணிக் கீரையை நன்கு சுத்தம் செய்து பாசிப்பருப்பு சேர்த்து பொரியல் செய்து கொள்ள வேண்டும். அதோடு தேங்காய் துருவல், பாதாம் பருப்பு தூள் மற்றும் நெய் கலந்து ஒன்றரை மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இல்லற வாழ்வை இனிமையாக்கும்.

பொன்னாங்கண்ணிக் கீரையை பச்சையாக சாப்பிட்டால் தொண்டை புண், உணவு குழாயில் ஏற்பட்ட புண் குணமாகும். பொன்னாங்கண்ணி கீரை சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தைலம் தயாரித்து அதனை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் எரிச்சல், உடல் உஷ்ணம் நீங்கி உடலுக்கு குளிர்ச்சியை தரும். கண்பார்வை தெளிவாகும்.

Tags :
|