Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • எலுமிச்சம் பழ தோல் அளிக்கும் பல்வேறு நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

எலுமிச்சம் பழ தோல் அளிக்கும் பல்வேறு நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Fri, 24 Mar 2023 09:30:11 AM

எலுமிச்சம் பழ தோல் அளிக்கும் பல்வேறு நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தியதும் தோலை வெயிலில் காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு உப்பு, மிளகாய் பொடி, பெருங்காய பொடி சேர்த்து இட்லி தோசைக்கு நல்லெண்ணெய் சேர்த்து தொட்டுக் கொள்ளலாம்.

எலுமிச்சை தோலை காய வைத்து பொடித்துக் கொண்டு, ரசத்தில் புளியின் அளவை குறைத்துக் கொண்டு சிறிது பொடியை சேர்க்கலாம். எலுமிச்சம் பழத் தோலை துண்டுகளாக நறுக்கி உப்பு தூவி, இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேக விட்டு, உப்பு மிளகாய்த்தூள் கலந்து கடுகு, பெருங்காயம் தாளித்து விட்டால், திடீர் ஊறுகாய் தயார்.

lemon,skin,ingredients,antifungal,skin ,எலுமிச்சம்பழம், தோல், பொருட்கள், பூஞ்சை நீங்கும், சருமம்

எலுமிச்சை தோலால் நகங்களை தேய்த்து வந்தால், நகங்கள் உடையாது சுத்தமாகவும் இருக்கும். எலுமிச்சை தோலில் செய்த பொடியை முகம், கை கால்களில் தடவிக் கொண்டு கழுவினால் சருமம் மினுமினுக்கும். எலுமிச்சை தோலினால் பாதங்களிலும், கணுக்கால் விரல்களிலும் தேய்த்துவர சுத்தமாகிவிடும். கருமை நிறம் படியாது.

எலுமிச்சை தோல் பொடியுடன் உப்பு சேர்த்து பல்பொடியாக பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலால் தாமிர பாத்திரங்களை தேய்த்தால் சுத்தமாகி பளபளக்கும். ஃபிரிட்ஜில் ஆங்காங்கே எலுமிச்சை தோலை போட்டு வைத்தால், கதவு திறக்கும் போது மணம் கமழும். எலுமிச்சை தோலினால் தோல் பெட்டி, பை போன்ற பொருட்களை தேய்த்தால், மேலே படிந்திருக்கும் பூஞ்சை நீங்கி சுத்தமாகி மினுமினுக்கும்.

Tags :
|
|