Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்ட நாவல் மரத்தின் பயன்கள் பற்று தெரிந்து கொள்வோமா!!!

அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்ட நாவல் மரத்தின் பயன்கள் பற்று தெரிந்து கொள்வோமா!!!

By: vaithegi Fri, 24 Feb 2023 9:05:26 PM

அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்ட நாவல் மரத்தின் பயன்கள் பற்று தெரிந்து கொள்வோமா!!!

நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.

விதை பொடி செய்து சாப்பிட நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும். ஆஸ்துமாவைக் குணப்படுத்தும், கபத்தைப் போக்கும், குடல் புழுக்களைக் கொல்லும்.

ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், தோல் நோய்களைக் குணப்படுத்தும். மரத்தின் வேறு பகுதிகளும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக அமையும்; உயிரி எதிர்ப்பொருளாகச் செயல்படும்: பூச்சிக்கொல்லியாகப் பயன்படும்; கபத்தையும் பித்தத்தையும் போக்கும். நாவல் விதைப் பொடியோடு மாமரத்தின் தளிர் இலைகளையும் தயிரையும் கலந்து அரைத்து உட்கொண்டால் சீதபேதி நீங்கும். பழம், உணவு செரிமானத்துக்கு உதவும். மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுவதைத் தடுக்கும்.

novel,benefits ,நாவல் ,பயன்கள்

Tags :
|