Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ப்ரஷர் குக்கரில் சமைக்கக் கூடாத உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்

ப்ரஷர் குக்கரில் சமைக்கக் கூடாத உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Tue, 20 Dec 2022 12:31:27 PM

ப்ரஷர் குக்கரில் சமைக்கக் கூடாத உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: எந்தெந்த உணவுகளையெல்லாம் ப்ரஷர் குக்கரில் வைத்து சமைக்கக்கூடாது என்று தெரியுங்களா? தெரிந்து கொள்வோம்.

பிரஷர் குக்கரில் நாம் சமைப்பது நல்லது என்றாலும் அதற்கு சமமான தீமைகளும் அதில் உள்ளது. ஏனெனில் நாம் ஒரு சில உணவுகளை மட்டுமே பிரசர் குக்கரில் சமைக்க வேண்டும் அது என்ன என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம் .

நீங்கள் பிரஸர் குக்கரில் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை சமைத்தால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உருளைக்கிழங்கு, பாஸ்தா, அரிசி போன்ற உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கும்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை உருவாக்குகிறது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்.

food,not cooked,pressure cooker,starch,digestible ,உணவு, சமைக்கக்கூடாது, பிரஷர் குக்கர், ஸ்டார்ச், ஜீரணிக்க முடியும்

ஆனால் பிரஷர் குக்கரில் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை சமைக்கலாம். ஏனெனில் பிரஷர் குக்கரின் அதிக வெப்பம் காரணமாக காய்கறிகளின் ஊட்டச்சத்துக்கள் குக்கருக்கு உள்ளேயே இருந்து வெளியே போவதில்லை.


இதனால் அது ஆரோக்கியமான பயன்களைத் தரும். அதேசமயம் அரிசி, உருளைக்கிழங்கு போன்ற ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை நீங்கள் சமைக்கும் போது அது உங்கள் புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மேலும் கோழி, ஆட்டிறைச்சி போன்றவற்றை குக்கரில் சமைக்கலாம். ஏனெனில் பாத்திரங்களில் சமைக்கும்போது வேக நேரமெடுக்கும். பிரஷர் குக்கரில் சமைக்கும்போது விரைவில் வெந்துவிடும் மற்றும் எளிதில் ஜீரணிக்க முடியும்.

Tags :
|
|