Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கரும்பில் அடங்கியுள்ள ஆரோக்கிய சத்துக்கள் பற்றி அறிந்து கொள்வோம்

கரும்பில் அடங்கியுள்ள ஆரோக்கிய சத்துக்கள் பற்றி அறிந்து கொள்வோம்

By: Nagaraj Fri, 14 Oct 2022 08:52:48 AM

கரும்பில் அடங்கியுள்ள ஆரோக்கிய சத்துக்கள் பற்றி அறிந்து கொள்வோம்

சென்னை: கரும்பில் அதிக அளவு நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஜின்க், தையாமின், ரிபோபிளவின், ப்ரோடீன், இரும்புச்சத்து போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.

கரும்பை உண்டால் உங்களுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். ஏனெனில் இதில் அதிக அளவில் இயற்க்கை சர்க்கரை நிறைந்துள்ளது. உங்கள் வேலையினை ஆரம்பிப்பதற்கு முன்னால் சிறிதளவு கரும்பு சாற்றினை குடித்தால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும்.

கரும்பில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்ணும்பொழுது அவை உங்களுக்கு கிடைக்கப்பெற்று உங்களுக்கு வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும்.கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் உங்களுக்கு இரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

sugarcane,immunity,strength,health,skin ,கரும்பு, நோய் எதிர்ப்பு, வலு, ஆரோக்கியம், சருமம்

கரும்பில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் பிளவனோய்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்களுக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும். கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்களின் சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் மேலும் உங்களுக்கு சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.

கரும்பு சாற்றில் அதிக அளவில் எலெக்ட்ரோலைட்ககள் நிறைந்துள்ளது. இவை உங்களின் கல் ஈரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும்.


கரும்பில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இவை உங்களின் சரும ஆரோக்கியத்தினை மேம்படுத்தி உங்களுக்கு தோல் சுருக்கம், வயதான தோற்றம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். கரும்பில் அதிக அளவில் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இவை உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி உங்களை எப்போதும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.

Tags :
|