Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வெங்காயத்தின் மருந்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

வெங்காயத்தின் மருந்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Mon, 27 June 2022 6:14:43 PM

வெங்காயத்தின் மருந்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: வெங்காயத்தின் மருந்துவ பயன்கள் பற்றி தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள்.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்த|ம் குறையும், பித்த ஏப்பம் மறையும். சமஅளவு வெங்காயச் சாறு வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி குறையும்.

வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சமஅளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட காது இரைச்சல் மறையும். வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

nervousness,fever,onion,medicinal properties,toothache,gingivitis ,
நரம்பு தளர்ச்சி, வெப்பநிலை, வெங்காயம், மருத்துவ குணம், பல்வலி, ஈறுவலி

வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். 6,வெங்காயத்தை வதக்கி சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும். வெங்காயத்தை அவித்து தேன் கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்

Tags :
|
|