Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பழங்களின் தனித்தன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம்!!

பழங்களின் தனித்தன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம்!!

By: Monisha Thu, 04 June 2020 1:37:03 PM

பழங்களின் தனித்தன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம்!!

மாதுளை பழம் சாப்பிட்டு வந்தால் கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறும் வராது.

நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டு வந்தால் வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.

முந்திரிப் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வைத் துலங்கும்.

தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிட்டு வந்தால் காச நோய் தணியும். கபம் விலகும்.

பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வந்தால் கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வந்தால் செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

pomegranate,cashew fruit,jackfruit,papaya,banana ,மாதுளை பழம்,முந்திரிப் பழம்,பலாப்பழம்,பப்பாளிப்பழம்,வாழைப்பழம்

உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

வாழைப்பழம் மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

வில்வப் பழத்தை பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும்.

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

Tags :
|