Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மொச்சைக் கொட்டை அளிக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்

மொச்சைக் கொட்டை அளிக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்

By: Nagaraj Tue, 14 Mar 2023 09:35:31 AM

மொச்சைக் கொட்டை அளிக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்

சென்னை; மொச்சை கொட்டை வறட்சியான நிலங்களில் விவசாயம் செய்ய மிகவும் உகந்த பயிர் ஆகும். இது மொச்சை பயறு, லிமா பீன்ஸ், பட்டர் பீன்ஸ் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

இதன் தோற்றம் வெண்ணை போன்று வழவழப்பாக இருக்கும். மொச்சைக் கொட்டைக் கொண்டு பலவகையான உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவரை போன்று இருக்கும் இதன் தோலை உரித்தால் அதற்குள் இருக்கும் பருப்பே கொட்டை மொச்சையாகும். ஒரு காயில் இரண்டு முதல் நான்கு கொட்டைகள் சிறுநீரக வடிவத்தில் இருக்கும்.

மொச்சை கொட்டையில் வெள்ளை மொச்சை, கருப்பு மொச்சை, சிவப்பு மொச்சை, மர மொச்சை, நாட்டு மொச்சை என பல வகைகள் இருக்கின்றன. அதன் வகைக்கு ஏற்ப பல்வேறு வடிவம், அளவு, நிறங்களில் மொச்சை இருக்கும்.

மொச்சை கொட்டையில் அடங்கியுள்ள சத்துக்கள்: 100 கிராம் பச்சை மொச்சையில் கீழ்காணும் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. தண்ணீர் - 10.17 கி, ஆற்றல் - 338Kcal, புரதம் - 21.46 கி, கொழுப்பு - 0.69 கி, கார்போஹைட்ரேட் - 63.38 கி, நார்ச்சத்து - 19.0 கி, சர்க்கரை - 8.50 கி, கால்சியம் - 81 மி.கி, இரும்புசத்து - 7.51 மி.கி, மெக்னீசியம் - 224 மி.கி, பாஸ்பரஸ் - 385 மி.கி, பொட்டாசியம் - 1724 மி.கி, சோடியம் - 18 மி.கி, ஜின்க் - 2.83 மி.கி, தைமின் - 0.507 மி.கி, ரிபோப்லேவின் - 0.202 மி.கி, நியாசின் - 1.537 மி.கி, வைடமின் பி6 - 0.512 மி.கி, போலேட் - 395 மி.கி, வைட்டமின் ஈ - 0.72 மி.கி, வைட்டமின் கே - 6.0 மி.கி. உள்ளன.

nuts,chemicals,good relief,constipation,fiber ,மொச்சைக் கொட்டை, ரசாயனங்கள், நல்ல நிவாரணம், மலச்சிக்கல், நார்ச்சத்து

மொச்சை கொட்டை நமது உடலுக்கு தேவையான புரதம், நார் சத்துகள், மினரல்ஸ் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கிறது. மொச்சையின் விதைகள் பச்சையாகவும், காய வைக்கப்பட்ட பிறகும் சமைத்து சாப்பிடபடுகிறது. மொச்சையில் டானின், டிரைப்சின் போன்ற வேதிபொருட்கள் இருப்பதால் சமைப்பதற்கு முன் ஊறவைத்து, மேற்கண்ட வேதிப்பொருட்களை நீக்க வேண்டும். அவித்தே உண்ண வேண்டும்.

இதய ஆரோக்கியம் காக்கும். மொச்சைக் கொட்டையில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், போலேட் மற்றும் சபோனின் போன்றவை உள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கவிடாமல் நார்ச்சத்து உதவுகிறது. இதய தமனிகளின் சுவர்கள் அடர்த்தி அதிகரிக்காமல் இருக்க போலேட் உதவுகிறது. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம், இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கிறது.

மொச்சையில் உள்ள கரையாத நார்ச்சத்து, சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. இதனால் மலச்சிக்கலுக்கான வாய்ப்பு குறைக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மொச்சைக் கொட்டையை உணவில் சேர்த்து கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மொச்சைக் கொட்டையில் உள்ள நார்சத்து, குடலில் நச்சுப்போருட்களின் வெளிப்பாட்டைக் குறைப்பதன் மூலம் பெருங்குடல் அழற்சியைத் தடுக்கிறது. பெருங்குடல் பகுதியில் புற்று நோய் உண்டாக்கும் ரசாயனங்களைத் தடுக்கிறது. மொச்சைக் கொட்டை ஒரு சிறிய அளவு ‘ஜெனிச்டின் மற்றும் டைட்சின்’ என்னும் ஐஸோஃப்ளவன்களைக் கொண்டுள்ளது. இது மார்பக புற்றுநோயைத் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

Tags :
|