Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நரம்பு தளர்ச்சி நோய்களை விரட்டி அடிக்கும் குணம் கொண்ட முடக்கத்தான் கீரை

நரம்பு தளர்ச்சி நோய்களை விரட்டி அடிக்கும் குணம் கொண்ட முடக்கத்தான் கீரை

By: Nagaraj Tue, 21 June 2022 12:15:06 PM

நரம்பு தளர்ச்சி நோய்களை விரட்டி அடிக்கும் குணம் கொண்ட முடக்கத்தான் கீரை

சென்னை; முடக்கத்தான் கீரையை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும், தோப்புகளில், வரப்போரங்களில் இது படர்ந்து இருக்கும்.

மழைக்காலங்களில் பச்சைப்பசேலென்று கொடி வீசிக் கிடக்கும்.
கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது. இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கீல்களில் வாதத்தினால் வரும் வீககத்திற்க்கு வைத்துக் கட்ட வீக்கம் வடியும்.

முடக்கத்தான் கீரையை வெறுவமன காலை வெறும் வயிற்றில் பச்சையாக கூட சாப்பிடலாம். உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்களுக்கு முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். அதைக் கடைப்பிடித்தால் மூட்டு வலி வராது. மூட்டு வலியின் ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும்.

freezing spinach,earache,healing,joint pain,suffering ,முடக்கத்தான் கீரை, காதுவலி, குணமடையும், மூட்டுவலி, அவதி

நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுதலை கிடைக்கும். வாரம் ஒரு முறை முடக்கத்தான் இலைகளை, அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து வரவும் பின் முடி கொட்டுவது நின்று விடும்.

மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஒரு கைப்பிடி முடக்கத்தான் கீரையை, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து அதை ஒரு கப் இட்லி மாவுடன் கலந்து தோசையாக ஊற்றி சாப்பிட்டு வர மூட்டு வலி பறந்து போகுமாம். முடக்கத்தான் கீரையை அரைத்து சாறு எடுத்து , காது வலி இருந்தால் காதில் 2 சொட்டு ஊற்ற காதுவலி குணமடையும்.

Tags :