Advertisement

ஆயுளை நீடிக்கும் தன்மை கொண்ட விளாம்பழம்

By: Nagaraj Sun, 20 Nov 2022 10:39:43 AM

ஆயுளை நீடிக்கும் தன்மை கொண்ட விளாம்பழம்

சென்னை: விளாம் பழத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கி உள்ளன. ஆயுளை நீடிக்கும் தன்மை விளாம் பழத்திற்கு உண்டு. ஞாபக சக்தி அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. ரத்தத்தை விருத்தி செய்வதுடன் இதயத்தை பலமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. புரதம், வைட்டமின் சி, இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின் ஏ ஆகிய சத்துகள் நிறைந்திருக்கின்றன.

lemongrass,jaggery,nervousness,cures,dizziness ,விளாம்பழம், வெல்லம், நரம்புத்தளர்ச்சி, குணமாகும், தலைச்சுற்றல்

பி2 உயிர்சத்தும் உள்ளது. விளாம் பழத்தை அரைத்து முகத்தில் பூசி வர வெயில் காலத்தில் இழந்த பொலிவை மீண்டும் பெறலாம். பனங்கற்கண்டுடன் விளாம்பழத்தை சாப்பிட பித்தக் கோளாறுகளால் உண்டாகும் வாந்தி, தலைச்சுற்றல் நீங்கும்.

விளாம்பழத்தின் இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்துக் குடித்தால் வாயுத்தொல்லை நீங்கும். வெல்லத்துடன் விளாம்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

Tags :
|