Advertisement

ஆயுளை பெருக்கும் தன்மை கொண்ட இஞ்சி

By: Nagaraj Tue, 21 June 2022 12:36:26 PM

ஆயுளை பெருக்கும் தன்மை கொண்ட இஞ்சி

சென்னை: இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

மாம்பழத்தை பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட் டால் பித்தத்தை தணிக்கும். ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும். பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும். விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

honey,stone,lemon,buttermilk,bile,royal wood ,தேன், கல்லடைப்பு, எலுமிச்சை, மோர், பித்த சூடு, அரச மரக்குச்சி

அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும். பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும். கமலாப்பழம்(ஆரஞ்சு)சாப்பிட்டால் உடல் உஷ்ணம் தணியும். நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.


எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும். அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

Tags :
|
|
|
|