Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கொத்தமல்லி விதையில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகள்

கொத்தமல்லி விதையில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகள்

By: Nagaraj Fri, 22 July 2022 5:09:37 PM

கொத்தமல்லி விதையில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகள்

சென்னை: தனியா என்ற பெயரால் அழைக்கப்படும் கொத்தமல்லி விதை பற்றி நம்முடைய மருத்துவ குறிப்புகளில் பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. விட்டமின் சி, பொட்டாசியம், கனி உப்புக்கள் போன்றவை தனியாவில் அதிகமாக உள்ளடங்கியுள்ளன.

தனியாவை தேனீராக தினமும் அருந்துவது நமக்கு முழுமையான பயன்களை தரும். நீரிழிவு தொந்தரவு இருப்பவர்கள் 10 கிராம் அளவு தனியாவை தண்ணீரில் இரவு ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை அருந்தினால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

தனியாவை தேநீராக தயாரிக்கையில் 20 தனியாவை இரவு முழுக்க ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரில் தேவையான அளவு தேயிலை, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து இனிப்புச் சுவைக்காக நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் போன்ற ஏதேனும் ஒன்றினைக் கலந்து தேநீராகத் தயாரித்து அருந்தலாம்.

coriander seeds,sugar,gallstones,kidney diseases ,கொத்தமல்லி விதைகள், சர்க்கரை, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரக பாதை நோய்கள்

பயன்கள்: கொத்தமல்லி விதையை தேனீராக தினமும் காலையில் அருந்தி வரலாம். இதன்மூலம் வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றுகிறது. வாயு மட்டுமல்லாது சளி, இருமல், தலைவலி, இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரக பாதை நோய்கள் முதலான பல நோய்களை போக்க வல்லது.

கொத்தமல்லி விதை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். மேலும் அலர்ஜி சார்ந்த பிரச்னைகள், உடல்வலி, மாதவிடாய் மற்றும் ஹைப்பர் டென்ஷன் பிரச்னைகளுக்கு அருமருந்தாக இருக்கிறது. ஹோர்மோன் சமநிலைக்கும் மல்லி விதை உதவி செய்கிறது.

இரைப்பை சார்ந்த பிரச்னைகளான வாயுத்தொல்லை, வயிற்று வலி, வயிறு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது

Tags :
|