Advertisement

ஏராளமான மருத்துவ நன்மைகள் கொண்ட கீழாநெல்லி செடி

By: Monisha Wed, 23 Sept 2020 5:46:34 PM

ஏராளமான மருத்துவ நன்மைகள் கொண்ட கீழாநெல்லி செடி

கீழாநெல்லி செடியில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது. அவற்றை இந்த பதிவில் காணலாம்.

கண் பார்வை மங்குதல், மாலைக் கண் போன்ற கோளாறுகளுக்கு, கீழாநெல்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரையை சம அளவு நன்றாக அரைத்து காலை, மாலை புளித்த மோரில் கலந்து தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகினால் கண்பார்வை அதிகமாகும்.

கீழாநெல்லியானது காளான் நோய்கள், புற்றுநோய்கள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படும். மேலும் இம்மூலிகை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையது. மேலும் கல்லீரலை பாதுகாக்கும்.

கீழாநெல்லி செடி 4 ஏலக்காய், அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த கல்கத்தை பால் அல்லது மோர் ஏதேனும் ஒரு அனுபானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க காமாலை நிச்சயம் குணமாகும்.

keelanelli,medicine,eyesight,health,headache ,கீழாநெல்லி செடி,மருந்து,கண்பார்வை,ஆரோக்கியம்,தலைவலி

கையளவு கீழாநெல்லி இலையை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து ஒரு டம்ளர் நீராக வரும் அளவுக்கு காய்ச்ச வேண்டும். இதை காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்துவர வெள்ளைப்படுதல் நோய் குணமடையும்.

தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக கீழாநெல்லி இலையை உப்பு சேர்த்து மையாக அரைத்து தோல் சம்பந்தமான நோய்களுக்கு பூசி வந்தால் அவைகள் குணமாகும்.

நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும்.

கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல் துலக்கி வர பல்வலி சரியாகும்.

Tags :
|