Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மருத்துவக்குணங்கள் நிறைந்த வேம்புவால் கிடைக்கும் நன்மைகள்

மருத்துவக்குணங்கள் நிறைந்த வேம்புவால் கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Sun, 02 Apr 2023 3:48:28 PM

மருத்துவக்குணங்கள் நிறைந்த வேம்புவால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: மருத்துவக்குணங்கள் நிறைந்த வேம்பு... வீட்டில் வேப்ப மரம் இருந்து அதன் காற்றை சுவாசித்தவர்களுக்குத் தெரியும் அதன் அருமைகளும்,பலன்களும்.வேப்ப மரக் காற்றை சுவாசித்தாலே பாதி வியாதிகள் பக்கத்திலே வராது என்பது உண்மை.வேம்பு எனப்படும் வேப்ப மரத்தின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ குணங்கள் பல அடங்கியுள்ளன.

வேப்பிலை கசப்பு சுவை மிக்கது. ஆனால் பக்குவமாக உண்ண கார்ப்பு சுவை கொள்ளும். கண்களுக்கு நன்மைகள் தரும். பித்தத்தைத் தணிக்கும். கிருமி, நஞ்சு, சுவையின்மையைப் போக்கி நலம் தரும்.

வேப்பம்பூவைப் கசப்பு சுவை தரும் .எண்ணெய் பச்சையும்,உஷ்ண வீரியமும் கொண்டிருக்கும்.இது மலத்தை இளக்கும். குட்டம், துன்பம், மூலம் ஆகிய நோய்களைப் போக்கும். கிருமிகளை அழிக்கும்.உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.

neem,yeast,dandruff,lice,medicines ,வேம்பு, சாம்பிராணி, பொடுகுத்தொல்லை, பேன், மருத்துவக்குணங்கள்

வேப்பம்பூ கசப்பு சுவை கொண்டிருந்தாலும் வறுத்து சாப்பிட பல நல்ல பலன்களை அளிக்கிறது. பித்தத்தையும், கபத்தையும் குறைக்க வல்லது. வேப்பங் கஷாயத்தை குளியலுக்கும்,பருகவும் பயன்படுத்த கிருமிகள் அழிந்து வயிறு சுத்தமாகும்.

வேப்பங்கொட்டை கஷாயத்தைப் பருகினால் மேகநோய் தணியும். வேப்பிலை யை மைய அரைத்து தேன் கலந்து பூசிவர ரணங்கள் விரைவில் ஆறும். வேப்பமரத்து வேர்க் கஷாயத்தை இளஞ்சூட்டில் நன்றாக வாய்க் கொப்பளிக்க பல் நோய் நீங்கும். வேப்பிலை,நெல்லி முள்ளி இரண்டையும் அரைத்து நெய் கலந்து மேல் பூச்சாக பூச அக்கி,காயம், அரிப்பு,வியர்க்குரு முதலியன நீங்கும்.

வேப்பங் தளிரை சமைத்து சாப்பிட்டால் ரத்த, பித்த நோய்கள் தீரும். வேப்பிலையை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால் பேன் மற்றும் பொடுகுத் தொல்லை நீங்கும். காய்ந்த வேப்பிலையுடன் சாம்பிராணி சேர்த்து தூபம் போட கொசு,பூச்சித் தொல்லைகள் இருக்காது.

இதுபோன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது வேம்பு.கோடையில் ஏற்படும் அம்மை,வியர்க்குரு போன்ற வெப்ப நோய்களையும் அண்டவிடாது.

Tags :
|
|
|