Advertisement

செம்பருத்தி பூ இதழ்கள் தரும் மருத்துவ நன்மைகள்!

By: Monisha Wed, 28 Oct 2020 10:57:34 AM

செம்பருத்தி பூ இதழ்கள் தரும் மருத்துவ நன்மைகள்!

செம்பருத்தி பூ பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. இந்த செம்பருத்தி பூ இதழ்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இந்த பதிவில் செம்பருத்தி பூ இதழ்கள் தரும் சில மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்

செம்பருத்தி பூவானது இதயம் சம்பந்தமான நோய்களை போக்க கூடியது. காலையில் எழுந்ததும் வெறும்
வயிற்றில் இந்த பூக்களின் இதழ்களை ஒரு 4-5 சாப்பிட்டு வந்தால் அது இதய நோய்களை குணமாக்கும்.
அதுமட்டுமல்லாமல் இதயத்தில் ஏற்படக்கூடிய படபடப்பு, இதய வலி, இரத்த குழாய் அடைப்பு போன்ற அனைத்து இதயம் சம்பந்தமான நோய்களையும் இது குணமாக்கக்கூடியது.

இரத்தசோகை இருப்பவர்கள் செம்பருத்தி பூவின் தூளுடன் மருதம் பட்டை தூளை சம அளவு கலந்து அதில் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து காலை மற்றும் மாலை இருவேளை சாப்பிட்டு வர இரத்தத்தில் இரும்பு சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.

red poppy flower,petals,health,anemia,medicine ,செம்பருத்தி பூ,இதழ்கள்,ஆரோக்கியம்,இரத்தசோகை,மருந்து

அஜீரண கோளாறினால் வயிற்றில் உள்ள வாயுக்கள் அதிகரித்து வயிற்றின் உட்புற சுவர்களை தாக்குவதால் வயிற்றிலும் வாயிலும் புண்கள் ஏற்படுகிறது. இப்படி ஏற்படும் புண்களை குணமாக செம்பருத்தி பூ பயன்படுகிறது. தினமும் காலையில் செம்பருத்தி பூவின் 10-15 இதழ்களை சாப்பிட்டுவந்தால் வாய்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.

சிலருக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவானது குறைவாக காணப்படும். இவர்கள் 3 அல்லது 4 செம்பருத்தி பூக்களை எடுத்து அதை 1 டம்ளர் நீரில் இட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் சிறிது தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வரும்பொழுது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

Tags :
|
|
|