Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மருத்துவக்குணங்கள் அடங்கிய வெட்டிவேர் அளிக்கும் நன்மைகள்

மருத்துவக்குணங்கள் அடங்கிய வெட்டிவேர் அளிக்கும் நன்மைகள்

By: Nagaraj Tue, 11 Oct 2022 11:28:27 AM

மருத்துவக்குணங்கள் அடங்கிய வெட்டிவேர் அளிக்கும் நன்மைகள்

சென்னை: வெட்டிவேர் என்பது நாட்டு மருந்தாக பயன்படக்கூடியது. வாசனை திரவியங்கள் செய்யவும், உணவு மற்றும் சில பானங்கள் செய்யும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் வாசம் மிகவும் அருமையாக இருக்கும்.

இது மிகுந்த குளிச்சியை தரும். மண்வீடுகளில் கூரையாக கூட இதனை பயன்படுத்துவர். மெத்தைகளில் திணிப்பாக இதனை பயன் படுத்தலாம். கதவுகளிலும், ஜன்னல்களிலும் திரைகளாக பயன்படுத்தலாம். இதன்மூலம் அந்த இடம் குளிர்ச்சியை அடைகிறது. இதன் நறுமணம் அந்த இடத்தை ஆக்கிரமிக்கும். இதனால் பூச்சிகள் அந்த இடத்தில் இருக்காது. இந்த பலன்களுக்காகவே வெயில் அதிகமாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இதனை அதிகமாக பயன்படுத்துவர்.

வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த நீரை குடிப்பதன் மூலம் உடல் சூடு குறைகிறது. உடலில் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மை அடைகிறது. சருமம் பாதுகாக்கப்படுகிறது.

scars,vetiver,oil,burns,dead tissue ,தழும்புகள், வெட்டிவேர், எண்ணெய், தீக்காயங்கள், இறந்த திசுக்கள்

வெட்டிவேரில் இருந்து எண்ணெய் எடுத்து பல விதமாக உபயோகப்படுத்துவர். வெட்டிவேரை ஆவியாக வடிப்பதன் மூலம் எண்ணெய் எடுக்கலாம். இந்த எண்ணெய் வாசனை திரவியங்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. உடம்பில் போடும், சென்ட் , ரூம் பிரெஷ்னேர் , முகப்பூச்சுகள் சோப், குளிர்பானங்கள் மற்றும் உணவுப்பொருட்களில் இதனை பயன்படுத்துவர்.


இதன் மென்மை மற்றும் குளிர்ச்சியான தன்மை, உடலின் வீக்கத்தை குறைக்கிறது. நரம்பு மண்டலம் மற்றும் சுழற்சி மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பக்கவாதம், வயிற்றுப்போக்கு போன்றவற்றால் ஏற்படும் அழற்சிக்கு இது ஒரு சிறந்த சிகிச்சை பொருளாகும்.


வெட்டிவேரில் இருக்கும் சிக்காட்ரிஷன்ட் என்னும் ஏஜென்ட் உடலில் வடுக்கள் மறைவதை துரிதப்படுத்துகிறது. வடுக்கள் ஏற்பட்ட இடத்தில் புதிய திசுக்கள் வளர்ந்து இறந்த திசுக்களை மாற்றி அமைகிறது. உடலின் எல்லா இடங்களும் ஒரே சீராக இருக்க செய்கிறது. பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் ஏற்படும் வரி தழும்புகள் , கொழுப்பு பிளவுகள் , அம்மைக்கு பிறகு ஏற்படும் தழும்புகள், தீக்காயங்கள் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.

Tags :
|
|
|