Advertisement

கோவக்காயில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்கள்

By: Nagaraj Fri, 23 Sept 2022 10:18:33 PM

கோவக்காயில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்கள்

சென்னை: கோவக்காய் காடுகளிலும், வேலிகளிலும் தானாகவே வளரும் தன்மை கொண்டது. கோவைக்காய் ஒரு வெப்பமண்டல தாவரமாகும், இது உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகள், தண்டுகள் மற்றும் காய்கள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. கோவக்காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது.

நமது பாட்டி வைத்தியத்தில் கோவக்காய் மற்றும் அதன் இலையின் சாறு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இதை நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். கோவைப்பழத்தை சாப்பிட்டால் நாக்கில் உள்ள புண்கள் விரைவில் ஆறிவிடும். இதில் பயன்கள் அதிகம் உள்ளது.

சர்க்கரை நோய்க்கு ஆயுர்வேத மருந்தாக கோவக்காய் பயன்படுத்தப்படுகிறது. இந்த தாவரத்தின் தண்டுகள் மற்றும் இலைகள் கூட சமையலில் பயன்படுத்தப்படுகிறது கோவைக்காய்.

courgette,nervous system,body weight,heart,good ,கோவைக்காய், நரம்பு மண்டலம், உடல் எடை, இதயம், நல்லது

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது முதல் நீரிழிவு போன்ற சர்க்கரை நோய்களைத் தடுப்பது வரை இயற்கையான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பை தடுக்க கோவைக்காய் உங்களுக்கு உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது. கோவைக்காயின் வேர் உடல் பருமனை தடுக்கும் பண்பு கொண்டது என்று ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளனர்.

இது இதயம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கும் சிறந்தது. இதை சுத்தம் செய்தாலோ, வேகவைத்தாலோ அல்லது நன்கு சமைத்தாலோ, கோவைக்காய் விளைவுகளை ஏற்படுத்தாது.

Tags :
|