Advertisement

நொச்சி இலையில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்கள்

By: Nagaraj Mon, 24 Oct 2022 9:47:15 PM

நொச்சி இலையில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்கள்

சென்னை: முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை அகற்றுவதற்கும் தோலில் இருக்கிற எண்ணெய் பசையைத் தவிர்ப்பதற்கும் முகத்திற்கு ஆவி பிடிப்பது உதவும். ஒரு மூட்டில் வலி வீக்கம் இருக்கிறபோது, அது நீர் கோர்த்ததால் உருவான வீக்கமாக இருந்தால் மூட்டில் மட்டும் இந்த வேர்வை சிகிச்சை அளிக்கலாம்.

மூக்கடைப்பு இருந்தால் அதற்கு சுவாசப்பாதை சரியாக நொச்சி இலை ஆவியை சுவாசிப்பதும் தீர்வாக அமையும். ஒத்தடம் கொடுப்பதற்கும் மசாஜ் செய்வதற்கும் நொச்சியிலையை ஒரு கட்டி பயன்படுத்துவது சித்த, ஆயுர்வேதத்தில் இருக்கிற ஒரு வழிமுறை.

இதனை பொட்டனம் என்றும் ‘இலைகிழி’ என்றும் அழைப்பார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கிற ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நொச்சி இலை மற்றும் மிளகை ஒரு மாத்திரையாக உருட்டி, வைரஸால் ஏற்படும் மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு முதல் மருந்தாக தருகின்றனர்.

magnificence of,nochi leaf ,
இலை, நொச்சி, மகத்துவம், வீக்கம், வலி குறையும்

இந்தியாவிலும் இம்மாத்திரை வீக்கம், வலி போக்குவதற்கு உள்ளுக்கு சாப்பிடும் மருந்தாக, ஆயுர்வேத சித்த மருந்துகளில் முக்கிய பங்காற்றுகிறது. இதனை வெளிப்பிரயோகமாக மட்டும் பயன்படுத்தாமல் மாத்திரைகளுக்கும் பயன்படுத்துவது வழக்கத்தில் இருக்கிறது.

சித்த மருத்துவத்தில் நொச்சித் தைலத்தை மூக்கடைப்பிற்கும், தலைவலிக்கும், மூட்டுவலிக்கும் வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தும் முறை இன்றைக்கும் இருக்கிறது. பொதுவாக எந்த வகை தாவரமாக இருந்தாலும் அதில் நறுமண எண்ணெய் இருக்கிறது.


அது பெரும்பாலும் கிருமிகளைக் கொல்லக் கூடிய சக்தியும் குருதிச் சுற்றோட்டத்தை அதிகப்படுத்தும் திறன் கொண்டு இருக்கும். இந்த காரணத்தால் சிறு காயம் அல்லது வீக்கம் ஏற்பட்டாலும் அந்தப் பகுதியில் மிக அதிகமான குருதிச் சுற்றோட்டத்தை ஏற்படுத்தி வீக்கம், வலி குறைவதற்கு ஆதாரமாய் இருக்கும்.

Tags :