Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சளி, இருமலை போக்கும் வெற்றிலையின் மருத்துவக்குணம்

சளி, இருமலை போக்கும் வெற்றிலையின் மருத்துவக்குணம்

By: Nagaraj Mon, 24 Oct 2022 9:46:49 PM

சளி, இருமலை போக்கும் வெற்றிலையின் மருத்துவக்குணம்

சென்னை: வெற்றிலை மருத்துவக்குணங்கள் கொண்டது... வெற்றிலையை அனலில் வாட்டி அதனுடன் ஐந்து துளசி இலையை வைத்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து சிறு குழந்தைகளுக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையைப் போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும், வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு, படைக்கு தடவி வர குணமாகும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத்திணறல் மற்றும் இருமலுக்கு நிவாரணம் கிடைக்கும்.

benefits of,betel leaves ,, பயன்கள், வெற்றிலை, மருத்துவக்குணம், சளி, இருமல்

வயிற்றுக்கோளாறு நீங்க, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும். வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கு வைத்துக்கட்ட நல்ல பலன் தரும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையுடன் சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக்கட்டி வர தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணெயில் தொட்டு, ஆசனவாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

Tags :