Advertisement

ஏலக்காயில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்கள்

By: Nagaraj Fri, 17 June 2022 6:39:10 PM

ஏலக்காயில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்கள்

சென்னை: ஏலக்காயைத் தினமும் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளும் போது சளி , இருமல் குணமாக்குவதோடு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. ஏலக்காயில் அத்தனை மருத்துவ குணங்கள் அடங்கிஉள்ளது.

வாசனைக்காகவும், சுவைக்காகவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது வெறும் சுவைக்காக மட்டுமில்லாமல் பல்வேறு மருத்துவக்குணங்களும் இதில் அதிகளவில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஏலக்காய் சாப்பிட்டால், வாய் துர்நாற்றம், இதயம் தொடர்பான பிரச்சனைகள், விக்கல், தோல் தொற்று நோய் போன்றவற்றை போக்குகிறது.
இத்தனை மருத்துவக்குணங்கள் நிறைந்துள்ள ஏலக்காயை தினமும் உணவில் எப்படி பயன்படுத்த வேண்டும்? என்ன விதமான ஊட்டச்சத்துக்கள் இடம் பெற்றுள்ளது என தெரிந்து கொள்ளுங்கள்.

cardamom,medicine,benefit,diet,fiber,list ,ஏலக்காய், மருத்துவம், நன்மை, உணவு, நார்ச்சத்துக்கள், பட்டியல்

வாசனைத் திரவியமான ஏலக்காயைத் தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு குறைந்தது 3 ஏலக்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு சாப்பிட வேண்டும். இதுப்போன்று தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, குறட்டைப்பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறது. இதோடு வாயுத் தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்னைகளை சரி செய்கிறது.

மேலும் மனநலம் மற்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு என்றும் கூறப்படுகிறது. மேலும் மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றிற்கும் ஏலக்காய் சிறந்த மருந்தாக இருக்கிறது. இதுப்போன்று பல்வேறு மருத்துவக்குணங்கள் இதில் அடங்கியுள்ளது.

ஏலக்காயைத் தினமும் நம்முடைய உணவில் அல்லது ஏலக்காய் டீ போன்று செய்து பருகும் போது சளி, இருமல், காய்ச்சலுக்குத் தீர்வாக அமைகிறது.மேலும் உடல் பருமன் , உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்னைகளுக்கும் ஏலக்காய் நல்ல பலன் அளிப்பதோடு ஏலக்காய் புற்று நோய் எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது எனவே இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னதாக, மறக்காமல் ஏலக்காயை உங்களது உணவில் சேர்த்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.

பொதுவாக முக்கிய மசாலா மற்றும் வாசனைப் பொருள்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஏலக்காயில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. மேலும் ரிபோப்ளேவின், நியாசின், வைட்டமின்சி, மாங்கனீசு, அத்தியாவசிய எண்ணெய்கள், டயட்டரி நார்ச்சத்துக்கள் பல உள்ளது. எனவே இவை நிச்சயம் நம்முடைய உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருளாகவே விளங்குகிறது.

Tags :
|
|