வெந்தயத்தின் மருத்துவ குணம்... தொப்பையை கரைய செய்யும்
By: Nagaraj Sun, 19 Nov 2023 7:58:24 PM
சென்னை: தொப்பையை கரைக்கும்... வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயம் சாப்பிடுவது மற்றும் வெந்தய டீ போட்டு குடிப்பது ஆகியவை தொடர்ந்து செய்தால் தொப்பை கரைந்து விடும் என்று கூறப்படுகிறது.
கொதிக்க வைத்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு 15 முதல் 20 நிமிடம் வரை மீண்டும் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் தொப்பை படிப்படியாக குறையும்.
வெந்தயத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் இருப்பதாகவும் அதனால் தான் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் வெந்தயத்தில் அமினோ ஆசிட் இருப்பதால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவது நல்லது. மேலும் வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை வராது என்றும் கூறப்படுகிறது.