Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் சூட்டை தணிக்கும் நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்

உடல் சூட்டை தணிக்கும் நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்

By: Nagaraj Sun, 13 Dec 2020 10:04:43 PM

உடல் சூட்டை தணிக்கும் நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்

இன்று கிராமமாக இருந்தாலும் சரி, நகரமாக இருந்தாலும் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர். உடலுக்கு நலன் தரும் உணவுகள் மற்றும் காய்கறிகள், பழங்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

அந்த வகையல் நுங்கு இப்போது தனியிடம் பிடித்து வருகிறது. இதில் வைட்டமின் பி, சி மற்றும் இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், புரத சத்துகள் அதிகம் உள்ளது.

relieves nausea,anemia,healing,cooling,heat ,நுங்கு, ரத்தசோகை, குணமாகும், குளிர்ச்சி, சூட்டை தணிக்கும்

உடல் எடையை குறைக்க வேண்டும் என்போருக்கு நுங்கு சிறந்த மருந்து. உடலிலுள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்துவதோடு, எடையைக் குறைக்கும் தன்மையும் கொண்டது. நுங்கு நீர் பசியை தூண்டும். மேலும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே சிறந்த மருந்தாக உள்ளது.

ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். கொளுத்தும் வெயிலைத் தாங்க முடியாதோருக்கு அம்மைநோய் தாக்குதல் ஏற்படுவது வழக்கம். நுங்கை சாப்பிட்டால் அம்மை வராமல் தடுக்கலாம். சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சலைத் தணிப்பதோடு, உடலில் உள்ள ஏழு தாதுக்களில் ஏற்படக்கூடிய சூட்டைக் குறைத்து குளிர்ச்சியை அளிக்கும்.

Tags :
|