Advertisement

ரோஜாப்பூவில் உள்ள மருத்துவக்குணங்கள்

By: Nagaraj Sat, 29 Aug 2020 12:00:43 PM

ரோஜாப்பூவில் உள்ள மருத்துவக்குணங்கள்

ரோஜா நாம் அன்றாடம் பார்க்கக் கூடிய பூக்களில் ஒன்று. இது சருமத்தில் ஏற்படும் முகப் பருக்களை குறைக்க உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இதில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளன.

ரோஜாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் சருமத்தில் ஏற்படும் முகப் பருக்களை குறைக்க உதவுகிறது. பன்னீர் கொண்டு நீங்கள் முகம் கழுவி வந்தால் முகப்பரு பிரச்சனைக்கு ஓர் சிறந்த தீர்வினை காணலாம். ரோஜாவில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி, ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். வைட்டமின் சி’யின் முக்கியத்துவம் என்ன என்றால் சருமத்தில் இருக்கும் செல்களை சேதம் அடையாமல் பாதுகாக்கிறது.

rose flower,acne,remedy,medicinal properties,mouthwash ,ரோஜாப் பூ, முகப்பரு, தீர்வு, மருத்துவக்குணங்கள், வாய்ப்புண்

ரோஜாப் பூ கற்கண்டு தேன் கலந்து வெயிலில் வைத்து 1 கிராம் சாப்பிட்டு வர சிறுநீரகம் மற்றும் இதயம் பலமாகும். வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களின் வாயில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கும்.

இந்த பிரச்சினையில் இருந்து விடுபட, வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும்போதே, அதனுடன் சிறிது ரோஜா இதழ்களையும் சேர்த்து மென்றுவர அந்த வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.

ரோஜாப் பூ இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை ஆகிய இருவேளை அப்படியே உட்கொண்டுவர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும். ரோஜாப் பூ கஷாயம் செய்து கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும்.

Tags :
|
|