Advertisement

மஞ்சளின் மருத்துவ பயன்கள்

By: vaithegi Thu, 04 Aug 2022 6:03:07 PM

மஞ்சளின் மருத்துவ பயன்கள்

மஞ்சள் ரத்தத்தைச் சுத்திகரித்து, உடலின் அனைத்துப் பகுதிகளையும் சுத்திகரிக்கிறது. தோலின் நிறத்தை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீர் செய்து, தோலுக்கு சத்துக்களை வழங்குகிறது. அழற்சியை நீக்கும் மஞ்சள் பருக்களுக்கு மிகச் சிறந்த மருந்து.

மஞ்சள் அனைத்து தோஷங்களை நீக்கி பித்தத்தை சமநிலைப் படுத்துகிறது. பித்தம் ரத்த சுத்திகரிப்பு மற்றும் கல்லீரல் சுத்திகரிப்புக்கு முக்கியமானது ஆகும்.

தினமும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை ஏதேனும் ஒரு வடிவில் உணவில் அல்லது தோலின் மீது பயன்படுத்துவது நல்லது. காய்கறிகள் மற்றும் உப்புமா போன்றவற்றில் மஞ்சள் தூளை பயன்படுத்தலாம். ஆட்டுப்பாலைக் காய்ச்சி மஞ்சளும் தேனும் கலந்து உறங்கச் செல்வதற்கு முன் பருகினால், உடல்நலம் பல்வேறு விதங்களில் மேம்படும்.

மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். உடலில் வெட்டு காயங்கள், தீக்காயங்கள், மற்றும் புண்களில் மஞ்சள் சிறந்த மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது.

மஞ்சளை சிறிது எலும்பிச்சை சாறில் தேய்த்து முகத்தில் பருக்கள் உண்டாகும் இடத்தில் தடவினால் ஆரம்பத்திலேயே பருக்கள் உண்டாவதாகி தடுக்கலாம். மஞ்சளுடன் சிறிது வேப்பிலை அரைத்து தேய்த்தால் அம்மையால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.

uses,yellow ,பயன்கள் ,மஞ்சள்

தினமும் முகத்திற்கு மஞ்சளுடன் சிறிது கடலை மாவு மற்றும் பால் ஆடை சேர்த்து தடவி வந்தால் முகம் பளபளப்பதோடு முகத்தில் கருமை மற்றும் காயங்கள் நீங்கிவிடும். உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை மஞ்சளுக்கு உண்டு. முகப்பருக்கள், கொப்பளங்கள், இவைகளை போக்க மஞ்சள் சிறந்தது.

மஞ்சளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் E, நியாசின், வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம், இரும்பு, கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன.

ஜலதோஷத்தால் மூக்கில் நீர்வடிதல், மார்பில் சளி கட்டிக்கொள்வதால் போன்றவைகளால் நாம் மிகவும் அவதிப்படுகிறோம். இப்படியான காலங்களில் இரவு நேரங்களில் சூடான பசும் பாலில் சிறிது மஞ்சள் மற்றும் சிறிது மிளகு தூள் கலந்து, தினந்தோறும் பருகிவர எப்படிப்பட்ட சளி, ஜலதோஷ பாதிப்புகளும் நீங்கும். ஜலதோஷத்தால் மூக்கில் நீர் வடிதல், தலைவலி ஆகியவை குறையும்.

புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு வயிற்றில் அவ்வப்போது சிறிய அளவில் வலிகள் ஏற்படும். மேலும் கருப்பையில் நச்சுக்கள் தங்கி பலவித தொல்லைகளை ஏற்படுத்தும். எனவே குழந்தையை பெற்றெடுத்த பெண்கள் மஞ்சள் பொடியை உணவில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று உபாதைகள் நீங்குவதோடு, கருப்பையில் தங்கியிருக்கும் நச்சுக்கள் நீங்கி உடல் நலத்தை மேம்படுத்தும்.

Tags :
|