Advertisement

நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க உதவும் தினை

By: Nagaraj Thu, 09 June 2022 10:54:59 PM

நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க உதவும் தினை

சென்னை: நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பச்சைப்பயிறை முளைக்கட்டி சாப்பிடும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.

தேவையான பொருட்கள் : தினை அரிசி - அரை கப் முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப் காய்ந்த மிளகாய் - நான்கு இஞ்சி - அரை அங்குலம் (நறுக்கியது) பெருங்காயம் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது) வெங்காயம் - 2 எண்ணெய், உப்பு - தேவையான அளவு துருவிய கேரட் - அரை கப்

millet,green beans,ginger,chilli,lentils ,தினை, பச்சைப்பயறு, இஞ்சி, மிளகாய், பெருங்காயம்

செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும். தினையை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். முளைகட்டிய பச்சைப்பயறைத் தினை அரிசியுடன் இஞ்சி, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துத் தண்ணீர்விட்டு இட்லி மாவுப் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

அதில் வெங்காயம், கேரட், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை சற்று தடிமனாக வார்க்கவும். தேய்க்காமல் அப்படியே மூடி வைத்து வேகவிட்டு இருபுறமும் எண்ணெய் விட்டுத் திருப்பிப்போட்டு இட்லிப் பொடி தூவி எடுத்து, காரமான தக்காளி - வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.

Tags :
|
|
|