Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடலில் இருக்கும் நோய்களை தீர்க்கும் நன்னாரி வேர்கள்!

உடலில் இருக்கும் நோய்களை தீர்க்கும் நன்னாரி வேர்கள்!

By: Monisha Tue, 29 Sept 2020 11:42:39 AM

உடலில் இருக்கும் நோய்களை தீர்க்கும் நன்னாரி வேர்கள்!

சித்த மருத்துவத்தில் நன்னாரியின் வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த நன்னாரி வேர் சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஷ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது.

நன்னாரி வேர்ப்பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவதோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.

நன்னாரி வேர் சூரணம் அரை கிராம் காலை மாலை வெண்ணையில் சேர்த்து உட்கொள்ள கொள்ள ஆரம்ப குஷ்டம் தீரும். தேனில் உட்கொள்ள கொள்ள பாண்டு, காமாலை தீரும். அதிகமாகச் சாப்பிட்டால் பசி இருக்காது.

paranormal medicine,health,disease,nannari roots,cough ,சித்த மருத்துவம்,ஆரோக்கியம்,நோய்,நன்னாரி வேர்கள்,இருமல்

நன்னாரி வேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறுநீரக நோய்கள் அனைத்தும் விலகும்.

நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்தமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்தப்பட்ட மனகோளாறுகள் நீங்கும். இவை தவிர வயிறு, குடல், இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.

நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும். சித்தமருத்துவத்தில் நன்னாரி பல தைலங்களிலும் லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

Tags :
|