Advertisement

இயற்கை உணவுகளே போதும்... உடல் எடையை குறைக்க!!!

By: Nagaraj Tue, 27 Dec 2022 11:27:10 PM

இயற்கை உணவுகளே போதும்... உடல் எடையை குறைக்க!!!

சென்னை: இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைப்பது என்று தெரிந்து கொள்வோம்

இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் உடல் எடை பிரச்சனையும் ஒரு அவதியாக் கருதப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து நாம் விடு படுவதற்கு உடனடியாக மருத்துவர்களை தான் நாடுகிறோம். ஆனால், நாம் இயற்கையான முறையில் உடல் பருமனை குறைத்தல் ஆரோக்கியமாகவும் , பக்க விளைவுகள் இல்லாமலும் இருக்கின்றது.

இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்ற செய்தி தொகுப்பை நாம் இதில் பார்க்கலாம்.

சோம்பு தண்ணீர்: சோம்பு தண்ணீர் உடல் எடையை குறைப்பதில் அதிக பங்கிணை வகுக்கிறது. தாகமாக இருக்கும் போதெல்லாம் சாதாரண தண்ணீரில் சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் குறைந்து இதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்

bad fat,strength,body weight,lemon juice,nutrients ,கெட்ட கொழுப்பு, வல்லமை, உடல் எடை, எலுமிச்சை சாறு, சத்துக்கள்

சுரைக்காய்: சுரைக்காய் நமது வீட்டில் சமையல்களில் பயன்பத்தும் காய்கறி வகைகளில் ஒன்று. சுரைக்காயில் உடலில் உள்ள எடையை குறைக்கும் ஆற்றல் உள்ளது. வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைப்பதில் சுரைக்காய் பெரும்பங்காற்றுகின்றது . உடல் பருமன் உடையவர்கள் வாரம் ஒருமுறை சுரைக்காயை உட்கொண்டு வந்தால், உடல் எடையை குறைக்க முடியும்.

பப்பாளி காய்: பப்பாளி நாம் அனைவருக்கும் அறிந்த ஒரு பழவகை. பப்பாளி காயில் உடல் எடையை குறைக்கும் ஆற்றல் அதிகளவில் உள்ளது. பப்பாளி காயை நாம் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைந்து விடும்.

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறுக்கு உடல் எடையை குறைக்க கூடிய ஆற்றல் இருக்கின்றது. எலுமிச்சை சாறில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் வல்லமை உடையது.

Tags :