Advertisement

தொடர் தும்மல் பிரச்னையை போக்க இயற்கை வழிமுறை

By: Nagaraj Thu, 08 Oct 2020 09:17:01 AM

தொடர் தும்மல் பிரச்னையை போக்க இயற்கை வழிமுறை

சிலர் சில நேரங்களில் தொடர் தும்மல் பிரச்சனையை சந்தித்து இருப்பார்கள். சிலருக்கு தும்மல் வந்தால் உடனே நிற்காது. இதை போக்குவதற்கான மருத்துவ குறிப்பு குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா காலகட்டத்தில் சாதாரண இருமல், தும்மல் என்றாலும், நம்மை நெருங்கியவர்கள் கூட நம்மை விட்டு பயத்துடன் சற்று விலகி நிற்கிறார்கள். அது சாதாரண தும்மல் தான் என்பது நமக்கு தெரிந்தாலும், இது சகஜம் என்று நாம் உணர்ந்தாலும் பிறருக்கு அது பயத்தை, அசௌகரியமான நிலையை கொடுக்கிறது.

honey,persistent sneezing,pepper,will eliminate the problem ,தேன், தொடர் தும்மல், மிளகுதூள், பிரச்னை நீங்கும்

அதேபோல் கொரோனா காலகட்டம் மட்டுமல்லாமல், பிற காலகட்டங்களிலும் தொடர் தும்மல் பிரச்சனை இருப்பவர்களை மற்றவர்களால் பெரிதும் விரும்புவதில்லை. தொடர்ந்து ஏற்படும் தும்மல் பிரச்சனைக்கு, தேன் சிறந்த நிவாரணி ஆகும். ஒரு ஸ்பூன் தேனில், சிறிது மிளகு தூள் சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று முறை சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தும்மல் வரும் பிரச்சனை நீங்கும்.

எலுமிச்சை சாறில் தேன் கலந்து குடிப்பதும் நல்லது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மூக்கில் ஏற்படும் அரிப்பிலிருந்து விடுவிக்க உதவும்.

Tags :
|
|