Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இயற்கை முறையில் உடல் பருமனை குறைக்கும் வழிமுறைகள்

இயற்கை முறையில் உடல் பருமனை குறைக்கும் வழிமுறைகள்

By: Nagaraj Fri, 03 Feb 2023 11:06:50 PM

இயற்கை முறையில் உடல் பருமனை குறைக்கும் வழிமுறைகள்

சென்னை: நாம் இயற்கையான முறையில் உடல் பருமனை குறைத்தல் ஆரோக்கியமாகவும் , பக்க விளைவுகள் இல்லாமலும் இருக்கின்றது.

இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சோம்பு தண்ணீர்: சோம்பு தண்ணீர் உடல் எடையை குறைப்பதில் அதிக பங்கிணை வகுக்கிறது. தாகமாக இருக்கும் போதெல்லாம் சாதாரண தண்ணீரில் சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் குறைந்து இதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

சுரைக்காய்: சுரைக்காய் நமது வீட்டில் சமையல்களில் பயன்பத்தும் காய்கறி வகைகளில் ஒன்று. சுரைக்காயில் உடலில் உள்ள எடையை குறைக்கும் ஆற்றல் உள்ளது.

bad fat,body weight,lemon juice,nutrients,strength, ,உடல் எடை, எலுமிச்சை சாறு, கெட்ட கொழுப்பு, சத்துக்கள், வல்லமை

வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைப்பதில் சுரைக்காய் பெரும்பங்காற்றுகின்றது . உடல் பருமன் உடையவர்கள் வாரம் ஒருமுறை சுரைக்காயை உட்கொண்டு வந்தால், உடல் எடையை குறைக்க முடியும்.

பப்பாளி காய்: பப்பாளி நாம் அனைவருக்கும் அறிந்த ஒரு பழவகை. பப்பாளி காயில் உடல் எடையை குறைக்கும் ஆற்றல் அதிகளவில் உள்ளது. பப்பாளி காயை நாம் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைந்து விடும்.

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறுக்கு உடல் எடையை குறைக்க கூடிய ஆற்றல் இருக்கின்றது. எலுமிச்சை சாறில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் வல்லமை உடையது.

Tags :