Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தோல் நோய்களுக்கு அற்புத மருந்தாக விளங்கும் வேப்பிலை

தோல் நோய்களுக்கு அற்புத மருந்தாக விளங்கும் வேப்பிலை

By: Nagaraj Sat, 18 Mar 2023 11:29:06 PM

தோல் நோய்களுக்கு அற்புத மருந்தாக விளங்கும் வேப்பிலை

சென்னை: தோல் நோய்களுக்கு அற்புத மருந்தாக விளங்கும் வேப்பிலையின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்க கூடியது வேப்பிலை. இது, வயிற்று புழுக்களை வெளித்தள்ளும். வீக்கத்தை கரைக்கும் தன்மை உடையது. உள் உறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது. அம்மை நோய்க்கு அற்புதமான மருந்தாகிறது.

வேப்பம் பூவை பயன்படுத்தி உடல் தளர்ச்சியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் அளவுக்கு காய வைத்த வேப்பம் பூ எடுக்கவும். இதனுடன் வெந்நீர் விட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும். இதை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்துவர உடலில் ஏற்படும். தளர்ச்சி நீங்கும். உடல் பலம் பெறும். கல்லீரலை பலப்படுத்தும் மருந்தாக இது விளங்குகிறது. ஆயுள் அதிகரிக்கும். நோய்களை நீக்கும். வேப்பிலை புத்தியை தெளிவுபடுத்த கூடியது.

neem,healing,fever,gourd,licorice powder ,வேப்பிலை, குணமாகும், காய்ச்சல், சுண்டைக்காய், அதிமதுரப்பொடி

புண்களை விரைவில் ஆற்றும். பித்தம், வாதத்தால் ஏற்படும் நோயை போக்கும். உயிரணு குறைபாடுகளை சரிசெய்யும். வேப்பங்கொழுந்தை பயன்படுத்தி அம்மை நோய்க்கான உள் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: வேப்பங்கொழுந்து, அதிமதுரப்பொடி.

செய்முறை: 2 பங்கு அரைத்த வேப்பங்கொழுந்து பசை, ஒரு பங்கு அதிமதுரப்பொடி சேர்த்து கலந்து சுண்டைகாய் அளவு உருண்டைகளாக உருட்டி காய வைத்து, காலை, மாலை என 3 நாட்கள் எடுத்துவர அம்மை கொப்புளங்கள் குணமாகும். காய்ச்சல் விலகி போகும்.

Tags :
|
|
|