Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆற்றல் மிக்க காய்கறிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள நூல்கோல்

ஆற்றல் மிக்க காய்கறிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள நூல்கோல்

By: Nagaraj Sun, 07 May 2023 12:28:00 PM

ஆற்றல் மிக்க காய்கறிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள நூல்கோல்

சென்னை: நமது அன்றாட சமையலில் நாம் அரிதாக பயன்படுத்தி வரும் சில காய்கறிகள் ஆற்றல் மிக்க காய்கறிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அப்படிப்பட்ட காய்கறிகளுள் ஒன்று டர்னிப் மற்றொன்று நூல்கோல் காய்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற உடல் நல ஆலோசகர் டாக்டர் மைக்கேல் கிரேஜர். மரணத்தை தள்ளிப்போட உதவும் உணவுகள் என்பது பற்றி பேசுகையில் அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டிய காய்களுள் ஒன்று என்று டர்னிப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

சுமார் 4000 ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வரும் கிழங்கு வகை காய்கறிதான் டர்னிப் . இது கிரேக்க நாட்டில் தோன்றியது. முட்டைக்கோஸ், காலிஃபிளவர் மற்றும் புரோக்கோலி போன்றே இதுவும் குருசிஃபெரே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான். இதனால் தான் டர்னிப் காயிலும் ஒரு காரல் வாடை வருகிறது.

டர்னிப் குறைந்த கலோரியும், அதிக நார்ச்சத்தும் கொண்ட காய். அதோடு முக்கிய வைட்டமின் களான ஏ,பி1,பி3,பி5,பி6 மற்றும் போலோட், வைட்டமின் சி,இ மற்றும் கே யும் உள்ளது. அதே வேளையில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னிசியம், மாங்கனிசு,பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ் போன்ற ஆற்றல் மிக்க தாதுக்களும். புரதச்சத்து மற்றும் பயன்தரும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. எனவேதான் டர்னிப் அதன் அனைத்து பகுதிகளிலும் ஆற்றலை கொண்ட சூப்பர் உணவு என்கிறார்கள்.

health,helps,brain,activity,thread ,ஆரோக்கியம், உதவுகிறது, மூளை, செயல்பாடு, நூல்கோல்

நடுத்தரமான ஒரு டர்னிப் காயில் உள்ளது 34 கலோரிகள்,4 கிராம் நார்ச்சத்து,1 கிராம் புரதம் மற்றும் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி யில் பாதியளவு உள்ளது இதிலுள்ள நார்ச்சத்து ஜீரணசக்தியை அதிகரித்து செரிமான பிரச்சனைகளையும் குடல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளையும் தவிர்க்க உதவுகிறது , உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது என்கிறார்கள்.

டர்னிப் காயிலுள்ள அதிகப்படியான வைட்டமின் சி குளிர் காலங்களில் வளர் சிதை மாற்றத்தை அதிகரித்து இருதயத்தையும், நுரையீரலையும் பாதுகாக்கிறது. டர்னிப்பிலுள்ள நைட்ரேட்ஸ் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றி ரத்த தமணிகள் சீராக செயல்பட உதவுகிறது.

டர்னிப்பில் உள்ள சல்போர்பைன் மற்றும் இன்டோல் 3 வேதிப்பொருள்கள் பெண்கனின் மார்பக புற்றுநோய், ஆண்களின் புரோஸ்டேட் கேன்சர் மற்றும் பெருங்குடல், கணையம், உணவுக்குழாய், தோல் புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

டர்ளிப்பிலுள்ள கால்சியம், மாங்கனிசு மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் பலத்திற்கு உதவுவதுடன், மூட்டு வலிகளையும் போக்குகிறது. குறிப்பாக மாங்கனிசு சரும இளமையை பாதுகாப்பதுடன், வயது முதிர்ச்சியால் ஏற்படும் சரும பாதிப்புகளை தவிர்க்கிறது குறிப்பாக குளிர்காலத்தில். டர்னிப்பிலுள்ள வைட்டமின் பி தொகுதிகளும், மெக்னிசியம் சத்தும் மூளையின் செயல்பாட்டை தூண்டுவதுடன் அதன் ஆரோக்கியம் காக்கவும் உதவுகிறது.

Tags :
|
|
|