Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • எலுமிச்சை வேக வைத்த தண்ணீரால் உடலுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள்

எலுமிச்சை வேக வைத்த தண்ணீரால் உடலுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள்

By: Nagaraj Mon, 06 June 2022 6:39:57 PM

எலுமிச்சை வேக வைத்த தண்ணீரால் உடலுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள்

சென்னை: எலுமிச்சை வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஒரு புளிப்புச் சுவைமிக்க ஆரோக்கியமான பழம். எலுமிச்சையைக் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் நன்கு சுவையாக இருப்பதோடு, உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது. முக்கியமாக எலுமிச்சை செரிமான பிரச்சனைகளைப் போக்கவும், தாகத்தைத் தணிக்கவும் பெரிதும் உதவுகிறது.எலுமிச்சையின் சாற்றில் மட்டும் சத்துக்கள் இருப்பதில்லை, அதன் தோலிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. எலுமிச்சையின் தோலில் உள்ள சத்துக்களைப் பெற, எலுமிச்சையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்நீரைக் குடிக்க வேண்டும். இந்த எலுமிச்சை வேக வைத்த நீர் பல நோய்களை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியுமா?
எலுமிச்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் ஃபோலேட் அமிலம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. இது தவிர, எலுமிச்சை உடல் எடையைக் குறைப்பதிலும், சிறுநீரக கற்களைக் கரைப்பதிலும் பயனுள்ளதாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்போது நாம் எலுமிச்சை வேக வைத்த நீரை குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

lemon,black tea,helps. high blood pressure,calcium,damage ,
எலுமிச்சை, ப்ளாக் டீ, உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம், கால்சியம், சேதம்

எலுமிச்சை வேக வைத்த நீரைக் குடிப்பதால் சருமத்தில் உள்ள பாக்டீயாக்களின் அளவு குறையும். இதன் விளைவாக சருமம் சுத்தமாக இருக்கும். குறிப்பாக இதில் வைட்டமின் சி அதிகளவில் நிறைந்துள்ளதால், எலுமிச்சை வேக வைத்த நீர் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு, சருமத்தில் ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது.
எலுமிச்சை வேக வைத்த நீரைக் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளதால், இது உயர் இரத்த அழுத்தத்தை சாதாரண நிலைக்கு கொண்டு வர உதவுகிறது. வேண்டுமானால் ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து குடியுங்கள்.

Tags :
|